விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, போட்டியாளராக, சின்னத்திரை நடிகர்களாக இருந்து வெள்ளித்திரைக்கு போனவர்கள் பலர் உள்ளனர்.  இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அதில் சமீபகாலமாக பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் ‘குக் வித் கோமாளி‘ தான்.  இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டே இதில் வரும் கோமாளிகள் தான், அந்த கோமாளிகளில் மிகவும் பிரபலமானவர் புகழ்.  இதற்கு முன்னர் புகழ் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.  கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவர் பெண் வேடமிட்டு நடிப்பது பலருக்கும் பிடிக்கும், தற்போது இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து ரசிகர்கள் பலரும் யார் இவர் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.  அதன்பின்னர் அது தன்னுடைய காதலி என்றும் கலக்க போவது யாரு ஆடிஷனிலிருந்து இருவருக்கும் பழக்கம் என புகழ் தெரிவித்திருந்தார்.  அதன்பின்னர் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.  தற்போது ஒருவழியாக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த புகழ்-பென்சியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது.  ஏற்கனவே இவர்கள் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதாகவும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.  இந்நிலையில் இவர் தற்போது அவரது குடும்ப விருப்பப்படி ஹிந்து முறைப்படி ஒரு திருமணத்தையும், பென்சி குடும்பத்தினர் விருப்பப்படி முஸ்லீம் முறைப்படி திருமணத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

pugazh

மேலும் படிக்க | செல்ஃபியா எடுக்குற? செல்போனை கோபமாக பிடுங்கிய நடிகர் சித்தார்த்!

புகழ்-பென்சி திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் புகழ் செய்த ஒரு காரியம் பலரையும் நெகிழ செய்துள்ளது.  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா, உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன்.  உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.  எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா’ என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  இதை அவர் வடிவேல் பாலாஜியை நினைத்து பதிவிட்டுள்ளார், விஜய் டிவியில் பிரபலமானவர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி, அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார், இவரது இறப்பு விஜய் டிவி பிரபலங்களுக்கு நீங்காத துயரத்தை அளித்தது.  இந்நிலையில் புகழுக்கு ஆரம்ப காலத்தில் முழு ஆதரவு கொடுத்தது வடிவேல் பாலாஜி தான், அவர் இறந்த பின்னும் புகழ் அவரை நினைத்து உருகுவது அவர் ரசிகர்களை பெருமையடைய செய்திருக்கிறது.

 

மேலும் படிக்க | கமல்-விஜய்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.