தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக நகைச்சுவை நடிகர் வடிவேலு இடம்பெறாமல் இருந்த நிலையில்  தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார்.  பல மீம் க்ரியேட்டர்களுக்கு குருவாக இருப்பவர் வடிவேலு தான், இவரை வைத்து தான் பல மீம்களை உருவாக்குகின்றனர்.  இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமின்றி இவரது உடல் அசைவே அனைவரையும் சிரிக்க வைத்துவிடும், அன்றிலிருந்து இன்றுவரை இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்து இருக்கிறார்.  ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பஹத் பாசில், உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்திலும், ‘சந்திரமுகி-2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் படிக்க | மீண்டும் போஸ்டர் சண்டையில் இறங்கிய விஜய் – அஜித் ரசிகர்கள்!

இந்நிலையில் தான் நடிக்கப்போகும் படத்தின் அப்டேட்டை வடிவேலு கொடுத்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்னர் இவர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  அதில் உங்களின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறினார்.  ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது, அந்த படத்தில் தான் வடிவேலு நடிக்கிறாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கபெற்வில்லை, விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பேசியவர் அரசியல் எனக்கு வேண்டாம், சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும் சீறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்.  தற்போது விஜய் சேதுபதி வெற்றிமாறனின் ‘விடுதலை’, கத்ரினா கைஃபுடன் ‘மெரி கிறிஸ்துமஸ்’, ஷாருக்கானுடன் ‘ஜவான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | தளபதி 67-ல் சிம்பு பட இயக்குநர்: விக்ரம் இயக்குநரின் பலே பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.