தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்களை அதிகம் பார்த்தவர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. நீண்ட நாள்களுக்கு பிறகு அவர் நடித்த ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் அதற்கு அடுத்து நடித்த மாநாடு படம் சிம்புவின் செகண்ட் இன்னிங்ஸுக்கு நல்ல ஓபனிங் கொடுத்தது. 100 கோடி ரூபாய் வசூல் செய்த அப்படத்துக்கு பிறகு சிம்பு மீண்டும் பிஸியாகியுள்ளார். அதன்படி, விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படம் கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. அதிகாலையிலேயே ரசிகர்கள் படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் படம் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடினார்கள்.

Sj Surya

படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் வெந்து தணிந்தது காடு படத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். ஜெயமோகனின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை கௌதம் மேனன் அட்டகாசமாக படமாக்கியிருப்பதாகவும், சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி மாநாடு படம் போல் வெந்து தணிந்தது காடு மிகப்பெரும் வெற்றி பெறும், கௌதம் மேனன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார், சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியின் அடுத்த க்ளாசிக் இது என படத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுக்கும், கௌதம் மேனனும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெந்து தணிந்தது காடு படம் தொடர்பாக நல்ல விஷயங்கள் கேட்கின்றன. படம் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். கௌதம் மேனனையும், சிம்புவையும் நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். தற்போது சூர்யாவின் இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.