தமிழ் திரையுலகில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ராகாவா லாரன்ஸ். இவரின், ‘முனி’ வரிசை திரைப்படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். தற்போது, புகழ்பெற்ற ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். 

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியிருந்தது. சந்திரமுகி முதல் பாகத்தை எடுத்த பி.வாசு தான் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தைப் போன்று இதிலும் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கிறார். சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படத்திற்காக ராகவா லாரன்ஸ் தனது உடலை மெறுகேற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் கட்டுடலுடன் காட்சியளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

திரைப்படங்களை தவிர்த்து ராகவா லாரன்ஸ், தன்னை எப்போதும் ஓர் ஆன்மீகவாதியாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராகவும்  அடையாளப்படுத்திக்கொள்வார். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவாற்றவர்கள் ஆகியோரின் நலன் சார்ந்தும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

மேலும் படிக்க | மதுரையில் இயக்குநர் அமீர் நடத்தும் போட்டி; 10 லட்சம் பரிசுத் தொகை வெல்ல வாய்ப்பு!Raghava Lawrence, ராகவா லாரன்ஸ்

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும். 

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். 

நன்கொடை வேண்டாம்

இப்போது, ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி  வருகிறேன். இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, எனது ( Larencce Charitable trust )  அறக்கட்டளைக்கு  உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Raghava Lawrence, ராகவா லாரன்ஸ்

உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.எனது ஆதரவாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்

மேலும் படிக்க | புத்தர் கோவிலில் வழிபாடு.. திறந்தவெளியில் சாப்பாடு; அஜித்தின் லேட்டஸ்ட் டிரிப் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.