தயாரிப்பாளர் ரவீந்திரன் அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை மணந்தார். அவருடைய திருமணம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவரும் தன் மனைவியுடன் தொடர்ந்து பல யூ டியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்தார். இவர்களின் திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்த நிலையில், நடிகை வனிதா விஜயக்குமாரும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ’கர்மா யாரையும் விடுவதில்லை’ என ரவீந்திரன் திருமணம் குறித்து கருத்து கூறியிருந்தார்.

மேலும் படிக்க | நடிகர்கள் என்ன அம்பேத்கரா பெரியாரா?… சத்யராஜ் விளாசல்

அந்த கருத்து பதில் கொடுத்துள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதா என்னுடைய திருமணம் குறித்து டிவிட்டரில் போட்டிருந்த பதிவை பார்த்தேன். அதில் குருமா.. இஸ் மை என ஏதோ எழுதியிருந்தார். அதைப் பற்றி இப்போது பேசுவதற்கும் எதும் இல்லை. என்னுடைய திருமணம் யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை. அதனால் எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்குள் இருக்கும் சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னதாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணத்தை ரவீந்திரன் கடுமையாக விமர்சனம் செய்தார். ஒருவரின் குடும்பத்தை பிரித்து வனிதா திருமணம் செய்யலாமா? என்றெல்லாம் கூறியிருந்தார். அதனை மனதில் வைத்து தான் இப்போது இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனை சாடினார் வனிதார். இப்போது, இந்த தொடர் கதைக்கு ரவீந்திரன் மீண்டும் ஒரு புள்ளியை வைத்திருப்பதால், வனிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் திரைப்படம் – முடிந்தது வியாபாரம்… முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ Source link

Leave a Reply

Your email address will not be published.