கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து கடந்த வியாழன் (செப். 15) அன்று வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது,“இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது. அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது. அதுபோல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி. ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதற்குள் பல சிக்கல்களும் இருக்கிறது. அதை கடந்துதான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

VTK

உங்களால் இந்த படம் பல இடங்களுக்கு சென்றது. அதற்கு உங்களுக்கு நன்றியை கூறிகொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு நன்றி. எனக்கு படம் இயக்குவதில் முழு சுதந்திரத்தை அவர் கொடுத்தார். நான் ஒரு கதை கொண்டு வரும்0போது, அதை என்னை நம்பி எப்போதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி. சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏஆர் ரகுமான் பெரும்பங்காற்றினார். அவருடைய மல்லிபூ பாடல் இப்போது அனைவரும் பாராட்டிகொண்டு இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி. 

சிம்புவுக்கு தேசிய விருது உறுதி

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர், ஐசரி கணேஷ்,”படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது. நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்த படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. 

இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார். அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார். இயக்குநர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிபடமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏஆர் ரகுமான் தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம் 2 விரைவில் தயாராகும்” என்றார். 

VTK

பட வெளியீட்டிற்கு முன்னர் இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களை நன்கு தூங்கிவிட்டு வந்து படத்தை பார்க்க சொன்னது பேசுபொருளாக மாறி படம் குறித்த பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்படம் வெளியானதிலிருந்து அதிகளவில் நேர்மறையான விமர்சனங்கள் தான் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘காட்டு பசில இருக்கேன்’ – மெகா திட்டத்துடன் களமிறங்கியிருக்கும் சிம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.