‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்.  விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் – சிம்பு காம்போ மீண்டும் இந்த வெற்றி திரைப்படத்தின் மூலம் இணைந்து இருக்கிறது.  இந்த படத்திற்கு அடுக்கடுக்காக பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் தென்னிந்திய திரையுலகின் திறமையான மற்றும் இளமை மாறாத முன்னணி கதாநாயகியாக இருக்கும் த்ரிஷாவும் இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா தனது புதிய படங்கள் குறித்த விவரங்களை அடிக்கடி ரசிகர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றி குறித்து பேசியிருக்கிறார்.  

மேலும் படிக்க | இதயங்களை கொள்ளையடிக்கும் குந்தவையின் க்யூட்டான க்ளிக்ஸ்!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை நினைத்து மகிழ்ச்சியடைந்த நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரியில் குறிப்பிடுகையில் தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மூன்று நபர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.  கௌதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோரது நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இன்றுவரை பலரது பேவரைட் லிஸ்டில் உள்ளது.  கார்த்திக்-ஜெஸ்ஸி பலராலும் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம், படத்தில் இடம்பெற்ற டயலாக்குகளும் பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை ஆக்கிரமித்துள்ளது, இந்த படத்தின் பாடல்களும் இன்றுவரை வைப் செய்யும் அளவிற்கு உள்ளது.

trisha

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் காலத்தில் கெளதம் மேனன்-சிம்பு-திரிஷா மூவரின் காம்போவில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படம் வெளியானது.  மீண்டும் கார்த்திக்-ஜெஸ்ஸியை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த குறும்படம் அமைந்திருந்தது, இந்த குறும்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.  தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி குறித்து த்ரிஷா சிம்புவை பாராட்டியதிலிருந்து, ரசிகர்கள் பலரும் மீண்டும் சிம்பு-த்ரிஷா இணையும் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு 2ஆம் பாகம் எப்போது ? – வெற்றி விழாவில் தயாரிப்பாளர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.