நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுவிட்டதால், அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இசையமைப்பாளர் தமன், வாரிசு படத்திற்கான இசை சூப்பராக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் சரத்குமார் பேசும்போது, படம் பக்கா என்டர்டெயினராக இருக்கும் என கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | கருணாஸ் நடித்துள்ள ஆதார் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

அவரைப் போலவே பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். பிரகாஷ் ராஜ் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும்போது, ஏன் செல்லத்துக்கூட ரொம்ப நாட்களுக்குப் பிறகு இணைந்து நடித்தது சூப்பரான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். இதனால், வாரிசு படத்தின் அப்டேட்டுகளை வரிசையாக எதிர்பார்த்து காத்திருக்கலாம் என இருந்த ரசிகர்களுக்கு, கூடவே தளபதி 67 படம் தொடர்பான அப்டேட்டுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவரே பலமுறை சூசகமாகவும் வெளிப்படையாகவும் இதனை தெரிவித்துவிட்டார். எனினும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் லோகேஷ். 

இது ஒருபுறம் இருக்க தளபதி 67 படத்திற்கான ப்ரீபுரொடக்ஷன்ஸ் மற்றும் கதை உருவாக்கம் ஆகியவை கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், தற்போது முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன், தளபதி67 படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளதாம். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 எப்போது?… மணிரத்னம் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJSource link

Leave a Reply

Your email address will not be published.