இந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தனுஷ். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் நடிப்பில் வெளிவந்த படமான திருச்சிற்றம்பலம் மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பாக வெளியான  திரைப்படம் ‘3’. 

இத்திரைப்படம் முலமாக தான் தமிழ் மற்றும் பிற மொழியில் ஹிட் பாடல்களை மட்டுமே கொடுக்கும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர். 

மேலும் படிக்க | கோவிலுக்கு போன இடத்தில் நேர்ந்த தர்மசங்கடம்; அவசர அவசரமாக வெளியேறிய ராஷ்மிகா மந்தனா 

நேற்று 200-க்கும் அதிகமான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் என தகவல்!! படத்தில் வரும் பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். மக்களின் ஆரவார வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதை கண்ட தமிழ் ரசிகர்கள் தமிழிலும் ரீ-ரிலிஸ் செய்ய வேண்டும் என தங்களது பதிவை  வெளியிட்டு வருகின்றனர்.

3 movie re release

2012- இல் வெளிவந்த இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பலருக்கு ஏற்கும் படி அமைய வில்லை. மேலும் பல விமர்சனங்களுக்கும் இது உள்ளானது. இருப்பினும் படத்தின் முதல் பாதியில், பள்ளி பருவத்தில் வரும் காதல், காமெடி காட்சிகள் அனைத்து தரப்புக்கும் ஏற்றவாறு அமைத்திருந்தால் இப்படம் அனைவரையும்  ஈர்த்தது. மேலும் பட்டி தொட்டி வரை பரவி ஹிட் செய்த ‘ஒய் திஸ் கொலவெறி’ மற்றும் அனைத்து பாடல்களும்  இப்படத்தின் வெற்றிக்கு வழிவகையாக அமைத்திருந்தன. 

ஆண்டுகள் கடந்தும் வெற்றி:

ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்பது காலங்கள் கடந்த பின்னும் அத்திரைப்படம் மக்களின் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்திருப்பதே ஆகும். அந்த வகையில் ‘3’ திரைப்படம் காலங்கள் கடந்தும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 Source link

Leave a Reply

Your email address will not be published.