விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், இதுவரை ஒளிபரப்பான சீசன்களிலேயே 5-வது சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான் சிறப்பாக விளையாடியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கிய போட்டியாளர் பாவ்னி, தாமரையுடன் பிரச்சனை பின்னர் அபிநய் காதல் என அடுக்கடுக்காக அடிபட்ட பெயர் பாவ்னி தான்.  இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அமீராலும் பாவ்னி பெயர் அதிகமாக பேசப்பட்டது, அமீர் பாவ்னி பின்னாலேயே சுற்றுவது சக போட்டியாளர்களுக்கு வயித்தெரிச்சலாக இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு பச்சை கொடி காட்டியது என்னவோ ப்ரியங்கா தேஷ்பாண்டே தான்.  நிகழ்ச்சியில் பாவ்னி சில சமயங்களில் அமீரை தவிர்த்து வந்தாலும் அவரால் முழுமையாக அமீரை தவிர்க்க முடியவில்லை என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக மாறியவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் பிரிந்து போவார்கள், அதே போல அமீரும், பாவ்னியும் பிரிந்து விடுவார்கள் என்று பலரும் நினைத்த நிலையில் அது நடக்கவில்லை.  இருவரும் அடிக்கடி வெளியில் செல்லும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது, அதன்பின்னர் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று கொண்டனர்.  இந்த நிகழ்ச்சி அமீர்-பாவ்னி இருவருக்காகவே நடப்பட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் இருவருக்குமிடையே சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தது, ஆனால் ஒருமுறை கூட பாவ்னி அமீரின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார்.  இந்நிலையில் தற்போது பிபி ஜோடிகள்-2வின் டைட்டில் வின்னராக அமீர்-பாவ்னி வெற்றிபெற்றுள்ள பாவ்னி இன்ஸ்டாவில் தனது ரைட்டப் மூலமாக அமீரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

bigg

மேலும் படிக்க | லீக் ஆனதா பிக்பாஸ் சீசன்-6 போட்டியாளர்கள் விவரம்? யார் யார்லாம் கலந்துக்குறாங்க?

பாவ்னி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியில் இருவரும் வெற்றி பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதோடு, ரசிகர்கள், மேக்கப் செய்தவர்கள், உதவி புரிந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி கூறியதோடு அமீருக்காக ஒரு ஸ்பெஷலான ரைட்டப்பையும் சேர்த்திருக்கிறார்.  அதில் அவர், ‘நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதுவும் போட்டியில் கலந்துகொள்வது மிகப்பெரிய விஷயம், ஆனால் நீங்கள் நடனமாட வைத்ததோடு ஜெயிக்கவும் வைத்து சிறந்த மாஸ்டர் என்று நிரூபித்து விட்டீர்கள் அமீர் மாஸ்டர்.  இந்த நிகழ்ச்சியில் உங்களுடன் பயணித்த ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் சிறந்த மாஸ்டர், சிறந்த கோ-டான்சர், சிறந்த நண்பர்.  இப்போது நாம் ஒன்றாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம், நீ என் வாழ்க்கை துணையாகிப்போகும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன், என்றென்றும் நீ என்னுடையவனாக இருப்பாயாக மற்றும் ஐலவ் யூ’ என க்யூட்டாகவும், உணர்வுபூர்வமாகவும் பதிவிட்டுள்ளார்.  இந்த போஸ்டுக்கு ப்ரியங்கா அமீரை டேக் செய்து டேய் பொண்ணு ஓகே சொல்லிடுச்சு டா என்று கமெண்ட் செய்துள்ளார்.

 

மேலும் படிக்க | ஏகே63 அப்டேட் கேட்டு தெறித்து ஓடும் அஜித் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.