தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற இந்த நடிகர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  

சூர்யா இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தின் பிரம்மாண்டமான மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.  இந்நிலையில் ‘சூர்யா 42’ படம் ஒரு பிரபலமான சக்திவாய்ந்த தமிழ் ஆட்சியாளரின் கதையை அடிப்படியாக கொண்டது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனுக்கு அடுத்து வேள்பாரி; இந்த முறை ஷங்கர் – ஹீரோ இவரா… ?

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் 10 மொழிகளில் வெளிாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஒரு பருந்தின் பார்வையில் போர்கள காட்சிகள் அதில் காட்டப்பட்டிருந்த நிலையில், சூர்யா கையில் ஆயுதங்கள் உடன் தோற்றமளித்தார்.

இந்நிலையில், சூர்யா 42 திரைப்படத்தில் 5 கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஐந்து கதாபாத்திரங்களிலும் சூர்யாவே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு, ’24’ திரைப்படத்திலும் சூர்யா மூன்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். ஆனால், வரலாற்று ரீதியிலான திரைப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் சவலான ஒன்றாகும். இந்த தகவலை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

‘சூர்யா 42’ படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஹ் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  பிரம்மாண்ட பொருட்செலவையில் உருவாகப்போகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ



Source link

Leave a Reply

Your email address will not be published.