விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியான ‘கோப்ரா’ திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் ரூ.13.67 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக்கப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கோப்ரா’ திரைப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ.9.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இரண்டாம் நாள் ரூ.2.56 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.1.83கோடியையும் தமிழகத்தில் வசூலித்துள்ள நிலையில், 3 நாட்கள் முடிவில் படம் மொத்தம் ரூ.13.67 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published.