2009 – 14ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் விழா சென்னையில் கோலாகலம்

04 செப், 2022 – 18:41 IST

எழுத்தின் அளவு:


Tamilnadu-state-film-award-function-in-chennai

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருது வழங்கும் விழா நடக்காமலேயே இருந்தது.

இந்நிலையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான விழா நடந்தது. விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

விக்ரம், அஞ்சலி, ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், ஹெச்.வினோத், ஐஸ்வர்யா ராஜேஷ், கரண், சித்தார்த், சரத்பாபு, மஹதி, விக்ரம் பிரபு, வசந்தபாலன், பிரபு சாலமன், ராம், நாசர், இமான், ஸ்வேதா மோகன், தம்பி ராமையா, சமுத்திரகனி, மாஸ்டர் கிஷோர், ஸ்ரீராம், ‛ஆடுகளம்’ நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, களவாணி எஸ்.திருமுருகன், பொன்வண்ணன், சற்குணம், பாடகர் கார்த்திக், தேவதர்ஷினி, ராதா மோகன், ஆர்த்தி கணேஷ், லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், சுகுமார், விடியல் ராஜ், ஜெயபிரகாஷ், எஸ்.பி.பி.சரண், லியோ ஜான்பால், இனியா, அனல் அரசு, சூப்பர் சுப்பராயன், ஷோபி, ஜி.ஆர்.கே.கிரண், செல்வி சாதனா, ஜே.சதீஷ் குமார், ஹரிச்சரண், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், சந்தானம்(கலை இயக்குனர்), காயத்ரி ரகுராம், மாஸ்டர்ஸ் ரமேஷ், விக்னேஷ்(காக்க முட்டை) நீரவ்ஷா, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இதேப்போல் சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீகுமார், சங்கீதா, சிவன் ஸ்ரீனிவாசன், வடிவுக்கரசி, ஸ்ரவன், கவுதமி(டிவி), விக்ரமாதித்தன், திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நேரில் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published.