20 வருட ரசிகையுடன் ஜெயசூர்யா முதல் சந்திப்பு : நெகிழவைக்கும் வீடியோ

05 செப், 2022 – 15:09 IST

எழுத்தின் அளவு:


Jayasurya-met-his-20-year-fan-girl

மலையாள திரையுலகில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயசூர்யா. 20 வருடங்களுக்கு முன்பு என் மன வானில் என்கிற படம் மூலமாக தமிழிலும் நுழைந்த இவர், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுடன் இணைந்து நடித்ததால் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல அறிமுகம் பெற்றார். தற்போதும் மலையாளத்தில் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜெயசூர்யா தனது ரசிகை ஒருவரை சந்தித்த நிகழ்வு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புதிதாக அறிமுகமாகும் அழகான சாக்லேட் ஹீரோக்களுக்கு கல்லூரி மாணவிகள் ரசிகைகள் ஆவது வழக்கம் தான். ஆனால் நடிகர் ஜெயசூர்யா முதன் முதலாக அறிமுகமான ஊமைப்பையன் உரியட பொண்ணு என்கிற படம் வெளியான சமயத்திலேயே, சினிமா என்றால் என்னவென்றே புரியாத பள்ளிக்கூட வயதில் தன்னை அறியாமலேயே ஜெயசூர்யவுக்கு ரசிகையாக மாறியவர் தான் கேரளாவை சேர்ந்த நீத்து ஜஸ்டின். நாளாக நாளாக தனது சொந்த அண்ணன் போலவே ஜெயசூர்யாவை நினைக்க ஆரம்பித்துவிட்டார் நீத்து ஜஸ்டின். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழிந்த நிலையில் தனக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பது ஜெயசூர்யாவுக்கு தெரியவந்து அவரை நேரில் வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து சந்தோஷத்தில் திளைக்க வைத்துவிட்டார் ஜெயசூர்யா.

நீத்து ஜஸ்டின் எப்படி தான் ஜெயசூர்யாவுக்கு ரசிகையாக மாறினேன் என்பது குறித்த தனது இருபது வருட ரசிகை பயணத்தை இரண்டு நிமிட அனிமேஷன் வீடியோவாக உருவாக்கியுள்ளார். இந்த வீடியோவையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஜெயசூர்யா, 20 வருடம் ஆன பின்னும் தன்மீது மாறாத அன்பு கொண்டிருக்கும் அந்த ரசிகை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.