ஹெலிகாப்டர் பயணம் ; 17,851 அடி உயர புத்தர் கோயில் – டிரெண்ட்டாகும் அஜித்

13 செப், 2022 – 18:12 IST

எழுத்தின் அளவு:


Ajith's-helicopter-ride-goes-viral

வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வந்த அஜித் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பைக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இருக்கிறார். தனது குழுவினர் உடன் லடாக்கில் பைக் ரைடிங்கில் உள்ள அஜித் அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் லடாக் பகுதியில் 17,851 அடி உயரத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு அஜித் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது, அதை இயக்குவது மாதிரியான போட்டோ, வீடியோவும் வெளியாகி உள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.