சென்னை: நிஜ வாழ்க்கையில்தான் கணவர்களுக்கு மதிப்பில்லை, செஸ் விளையாட்டில்கூட ராஜாவைவிட ராணிக்குத் தான் அதிக சக்தி இருக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் செஸ் போட்டிகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சமூகவலைத்தளங்களிலும் அது பற்றிய பேச்சே ஆக்கிரமித்து வருகிறது. மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

ஒரு குரூப் தங்களுக்கு செஸ் விளையாடவே தெரியாது என ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, வழக்கம் போல் ‘இதிலும் ராணியின் ஆதிக்கம் தானா? ராஜாவை இப்படி அடக்கி வைத்திருக்கிறீர்களே..’ என பீல் பண்ணி வருகிறார் மற்றொரு குரூப். ‘ஒரே ஒரு கட்டம் மட்டும் தாண்டுறியே.. உனக்கெல்லாம் யாரு ராஜா பதவி கொடுத்தது?’ என ராஜாவைக் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…

Source link

Leave a Reply

Your email address will not be published.