வெந்து தணிந்தது காடு படத்தில் கதை என்னன்னு எனக்கே தெரியாது – கவுதம் மேனன்

03 செப், 2022 – 16:01 IST

எழுத்தின் அளவு:


I-don't-know-what-story-is-Vendhu-Thanindhathu-Kaadu-says-Gautham-menon

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன் நடித்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. நாயகியாக சித்தி இட்னானி நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா நடித்துள்ளார். செப்., 15ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீடு ரசிகர்களின் முன்னிலையில் பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நேற்று நடைபெற்றது.

கவுதம் மேனன் பேசியதாவது : ‛‛நதிகளில் நீராடும் சூரியன் என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார் ஆனால் அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார். ஆனால் நான் சிம்பு புது ஹீரோ போல் உழைப்பார் என்று ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார். ஏ ஆர் ரஹ்மான் முதலில் அந்தக்கதைக்கு 3 பாடலகள் தந்திருந்தார். பின் இந்தக்கதை சொன்ன போது புது பாடல்கள் தந்தார். ஐசரி எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். இவர்களால் தான் இந்தப்படம் உருவாகியது.

இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் தான் படம். எனக்கு இந்தப்படம் ஒரு புது விசயமாக இருந்தது. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். இதில் ஜெயமோகன் கதை தந்த போது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப்போவது போல் ஒரு காதலை வைத்துள்ளேன். ஏஆர்.ரஹ்மானுக்கு எனக்கும் உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை சொல்லி பாடல்கள் சொல்லி விவாதிப்பார். வேலை செய்யும் அனுபவமே நன்றாக இருக்கும்” என்றார்.

ரஹ்மான் பேசியதாவது : ‛‛இசைக்காதலன் கவுதம் மேனன். அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக் கொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன். தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கவுதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால் தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவும் பிடிக்கும், அவருக்காகவும் தான் இந்தப்படம் செய்தேன். பாடல்களும் படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

நாயகி சித்தி பேசியதாவது : ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்தப்படம் பற்றிய அறிவிப்பு முதலில் வந்தபோது ஜீவிஎம், எஸ்டிஆர், ஏஆர்ஆர் கூட்டணியில் நடிக்கும் நாயகி லக்கியஸ்ட் கேர்ள் என நினைத்தேன். அதிர்ஷடவசமாக அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. கவுதம் படத்தில் நாயகியாக நடிப்பது எல்லோருக்கும் கனவு. அவர் படங்களில் நாயகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். சிம்பு மிகச்சிறந்த நடிகர். அவருடன் நடித்தது மிக அற்புதமான அனுபவம். ஏஆர்ஆர் என் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களில் இசையாக உடனிருந்துள்ளார். இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.