‘வீரம்’ ஹிந்தி ரீமேக்கைப் படமாக்கி வரும் சல்மான் கான்?

14 செப், 2022 – 11:41 IST

எழுத்தின் அளவு:


Salman-khan-making-Veeram-movie-remake-in-hindi

சிவா இயக்கத்தில், அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் ‘வீரம்’. இப்படம் பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் 2017ம் ஆண்டிலும், கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிக்க ‘ஒடேயா’ என்ற பெயரில் 2019ம் ஆண்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடத்தில் இப்படம் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் சல்மான் கான் ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் அந்த எண்ணத்தை அவர் கைவிட்டார் என்று சொன்னார்கள். இதனிடையே, இப்போது சல்மான் கான் நடித்து வரும் ‘கிசி பாய், கிசி கி ஜான்’ என்ற படம் ‘வீரம்’ படத்தின் ரீமேக்காகத்தான் உருவாகி வருகிறது என்கிறார்கள்.

இப்படத்திற்கு முதலில், ‘கபி ஈத் கபி தீவாளி’ எனப் பெயரிட்டிருந்தார்கள். சமீபத்தில் ‘கிசி பாய் கிசி கி ஜான்’ எனப் பெயர் மாற்றியுள்ளார்கள். இதற்கு ‘யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். இப்படத்தில் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடக்கிறார். தெலுங்கு சீனியர் ஹீரோவான வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் ஜெகபதி பாபு வில்லனாகவும் நடிக்கிறார்கள். இந்த வருடக் கடைசியில் இப்படம் வெளியாக உள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.