‘வாத்தி’ வெளியீடு அறிவிப்பு : டுவீட் எதுவும் போடாத தனுஷ்?

21 செப், 2022 – 10:28 IST

எழுத்தின் அளவு:


Dhanush-did-not-share-about-Vaathi-release

தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களின் வெளியீட்டு அறிவிப்பு அடுத்தடுத்து இரண்டு நாட்களில் வெளியானது. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு நடிகருக்கும் இப்படி அறிவிப்பு வந்திருக்காது. தனுஷ் தமிழ், தெலுங்கில் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 19ம் தேதியன்று காலை திடீரென அறிவிக்கப்பட்டது.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தனுஷ் அந்தப் பட வெளியீட்டு அறிவிப்பு பற்றி இதுவரையிலும் கண்டு கொள்ளவில்லை. அதே சமயம் அவர் நடிக்கும் மற்றொரு படமான ‘நானே வருவேன்’ படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு நேற்று செப்டம்பர் 20ம் தேதியன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் வெளியீட்டைப் பற்றி மட்டும் உடனடியாக தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவர் அடுத்து நடிக்க உள்ள ‘கேப்டன் மில்லர்’ படம் பற்றிய அப்டேட்டுகளையும் தவறாமல் பதிவிட்டு வருபவர் தமிழ், தெலுங்கில் முதல் முறையாக நடிக்கும் ‘வாத்தி’ படத்தைப் பற்றி எதுவுமே பதிவிடாதது இரண்டு திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஓடிடி வெளியீடு பற்றி கூட நேற்று பதிவிட்டுள்ளார் தனுஷ்.

தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் இந்த மாதம் வெளியாகும் என்று கடந்த பல நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. அந்தப் படத்தின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே ‘வாத்தி’ படத்தின் அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது தனுஷுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதன் காரணமாகவே அவர் அந்தப் படம் பற்றிய அப்டேட்டைத் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published.