வர்ஷாவை கண்டு தெறித்து ஓடும் நெட்டிசன்கள்

23 செப், 2022 – 11:40 IST

எழுத்தின் அளவு:


Varsha's-post

தமிழில் சசிகுமார் நடித்த வெற்றிவேல் சீமத்துரை மற்றும் பிகில் ஆகிய படங்களில் முக்கிய வாரத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா போலாமா பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியாவின் சாயலில் இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது புதிய அதிரடி செயலால் நெட்டிசன்கள் விட்டால் போதும் என தெரிவித்து ஓடுகின்றனர்.

அப்படி என்ன செய்து விட்டார் வர்ஷா என்றால் சோசியல் மீடியாவில் திடீரென ஒரு கேள்வி பதில் பகுதியை ரசிகர்களுடன் ஆரம்பித்த வர்ஷா அதில், “நான் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து சில கேள்விகளை கண்டுபிடித்துள்ளேன். அதற்கான பதிலை உங்களில் யாராவது கூறுங்கள்” என்று ஆரம்பித்துள்ளார். சரி ஏதோ பொது அறிவு கேள்வியாக இருக்கும் என நினைத்த நெட்டிசன்களுக்கு அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் கிறுகிறு தலையை சுற்ற வைத்து விட்டது.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இங்கே வரும் ‘ஹனி பீ’யை எப்படி அழைப்பீர்கள் என கேட்டுவிட்டு யாருக்கும் பதில் தெரிய்தாததால் ‘யுஎஸ்பி’ என அழைக்கவேண்டும் என அவரே பதிலும் கூறியுள்ளார். கேள்விகள் எல்லாம் இதேபோல் எடக்கு மடக்காக இருக்கவே நெடிசன்கள் பலரும் ஆளைவிட்டால் போதுமடா சாமி என எஸ்கேப் ஆகிவிட்டனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.