கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை வைத்து, சமூகவலைத்தளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

நம்மூரில் ஒவ்வொரு பண்டிகைக்கும் என தனித்தனியே பலங்காரங்களும் பிரபலம். அந்தவகையில் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும், சுண்டலும் மக்கள் விரும்பி செய்கிறார்கள். ஆனால் சிற்றுண்டியாக சாப்பிட வேண்டியதை, ஒரு நாள் முழுவதும் உணவாகச் சாப்பிடச் சொன்னால், வீட்டில் உள்ளவர்கள் பாவம்தானே. அதுவும் ஒருநாள் என்றால்கூட பரவாயில்லை. சில வீடுகளில் அடுத்த நாளும் மீண்டும் போன கொழுக்கட்டைகளைச் சாப்பிடச் சொல்வது வார்த்தைகளில் விவரிக்க முடியாத நிலை.

விநாயகர் சதுர்த்தி: ஒரே நாளில் 1.21 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்-பேருந்துகளில் மக்கள் கூட்டம்! விநாயகர் சதுர்த்தி: ஒரே நாளில் 1.21 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்-பேருந்துகளில் மக்கள் கூட்டம்!

வீட்டில் தருவதை வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டால்தான், அடுத்த வேளைக்கு உணவு கிடைக்கும் என்பதால், வேறு வழியில்லாமல் பழைய கொழுக்கட்டைகளையும் சிலர் சாப்பிடுகிறார்கள். ஆனால், விவேக் காமெடி மாதிரி, ‘வலி.. அது வேற டிபார்ட்மெண்ட்..’ என தங்களது மனதில் எழும் உணர்ச்சிகளை மீம்ஸ்களாக இணையத்தில் கொட்டி வருகின்றனர்.

பாண்டியா டாட் வச்சிட்டு.. ஒரு ரியாக்சன் தந்தான் ப்ரோ.. மறக்கவே மாட்டேன்!  டிரெண்டானா IND vs பாக் மீம்ஸ்பாண்டியா டாட் வச்சிட்டு.. ஒரு ரியாக்சன் தந்தான் ப்ரோ.. மறக்கவே மாட்டேன்! டிரெண்டானா IND vs பாக் மீம்ஸ்

ஒவ்வொரு மீம்ஸ்களும் ஒவ்வொரு லெவலில் கலக்கலாக உள்ளது. வழக்கம்போல, கொழுக்கட்டையை நினைத்து மக்களை மட்டும் புலம்ப விடாமல், சற்று வித்தியாசமாக பிள்ளையாரையும் பீல் பண்ண வைத்திருக்கிறார்கள். அதிலும் கேஜிஎப் வசனம் எல்லாம் பேச வைத்திருப்பது வேற லெவல்.

இதோ அப்படியாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் கொழுக்கட்டை மீம்ஸ்களில் சில உங்களுக்காக…

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையில் வைரலான மீம்ஸ் தொகுப்பு

ஆங்கில சுருக்கம்

இவை விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையில் சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு.

கதை முதலில் வெளியிடப்பட்டது: வியாழன், செப்டம்பர் 1, 2022, 19:26 [IST]

Source link

Leave a Reply

Your email address will not be published.