தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் – சிம்பு காம்போவில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.