லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,சூர்யா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘விக்ரம்’. கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 400 கோடி வசூலை எட்டியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளுகுளு’ போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் எழுத்தாளராக பணியாற்றி இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள விஜய்யின் தளபதி 67 படத்திலும் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார் இந்த ரத்ன குமார். விஜய் படத்தை முடித்த பிறகு ராகவா லாரன்ஸை வைத்து படம் ஒன்றை இயக்க ரத்ன குமார் திட்டமிட்டு வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்காக தான் விக்ரம் டீம் மீண்டும் இணையவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆம், இந்தப் படத்தை கமல்ஹாசனின் RKFI தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரத்ன குமார், ராஜ் கமல் நிறுவனம் ஓகே, இதில் லோகேஷ் எங்கே என நினைக்கிறீர்களா… உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல், லாரன்ஸுக்காக ரத்ன குமார் தேர்வு செய்துள்ள கதை லோகேஷ் கனகராஜ் எழுதியது. இதனால் இந்தப் படத்தின் அறிவிப்பு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.