ம.பொ.சி வாழ்க்கையை படமாக்கவில்லை: போஸ் வெங்கட் விளக்கம்

03 செப், 2022 – 14:55 IST

எழுத்தின் அளவு:


Bose-Venkat-about-Maposi-movie

நடிகர் போஸ் வெங்கட் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு அவர் இயக்கும் 2வது படம். ம.பொ.சி. இதில் விமல் ஹீரோவாக நடிக்க கன்னிமாடம் படத்தில் நடித்த சாயாதேவி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சரவணன், ரமா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இனியன் ஒளிப்பதிவு செய்கிறார், சித்து குமார் இசை அமைக்கிறார்.

இந்த படம் சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வாழ்க்கை வரலாறு என்ற தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்துள்ளார் போஸ் வெங்கட். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

படத்தின் தலைப்பை மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம். ஒருவேளை ம.பொ.சி. அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, களங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப் படம் ம.பொ.சி அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும்.

Source link

Leave a Reply

Your email address will not be published.