மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதிக்கு தந்தையாக நடிகர் வடிவேலு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு இந்தப் படத்தில் அழுத்தமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹீரோக்களுக்கு தந்தையாக வடிவேலு நடிக்காத நிலையில், இந்தப் படத்தில் முதன்முறையாக படத்தின் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக அவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. பாசமிகு தந்தையாக நடித்துள்ள வடிவேலுவின் இந்தப் புதிய பரிமாணத்தைக்காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.