பிரபாஸ் பற்றி நிறைவேறாத கிருஷ்ணம் ராஜுவின் ஆசை

11 செப், 2022 – 16:06 IST

எழுத்தின் அளவு:


Unfulfilled-Wishes-Of-Krishnam-Raju

தெலுங்குத் திரையுலகத்தின் ‘ரெபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜூ உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை ஐதராபாத்தில் காலமானார்.

‘பாகுபலி, ராதேஷ்யாம்’ நடிகரான பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. பிரபாஸின் திரையுலக வளர்ச்சியில் கிருஷ்ணம் ராஜுவின் பங்கு முக்கியமானது. பிரபாஸ் குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் கிருஷ்ணம் ராஜுவும் ஒருவர்.

42 வயதான பிரபாஸுக்குத் திருமணத்தை நடத்திப் பார்க்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டவர். அந்த ஆசை நிறைவேறாமல் மரணத்தைத் தழுவியுள்ளார். மேலும், கிருஷ்ணம் ராஜுவின் திரையுலக வாழ்க்கையில் பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘பக்த கண்ணப்பா’. அந்தப் படத்தை இந்தக் காலத்திற்கேற்ப மீண்டும் உருவாக்க ஆசைப்பட்டிருந்தார் கிருஷ்ணம் ராஜு. அவர் நடித்த கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கவும் சம்மதித்திருந்தார். படத்தைத் தயாரித்து இயக்க வேண்டும் என்று ஆசையில் கிருஷ்ணம் ராஜு இருந்தார். அந்த ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது.Source link

Leave a Reply

Your email address will not be published.