பாவனாவின் மலையாள படப்பிடிப்பு நிறைவு

19 செப், 2022 – 14:12 IST

எழுத்தின் அளவு:


Bhavana-wrapped-her-malayalam-movie-shooting

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன்பின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய இவர் தமிழ், மலையாள, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். அந்தவகையில் கடந்த 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக ஆடம் ஜான் என்கிற படத்தில் இணைந்து நடித்தார் பாவனா. அந்த சமயத்தில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு காரணமாக அதன்பின் வந்த நாட்களில் ஒரு கடினமான சூழ்நிலையை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கினார். பின்னர் பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனதுடன் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் முன்புபோல மலையாளத்தில் கவனம் செலுத்தி சில படங்களில் நடித்து வருகிறார் பாவனா. அப்படி அவர் நடித்து வந்த ‛என்டிக்காக்காகொரு பிரேமந்தார்னு’ என்கிற படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுபற்றிய தகவல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்தப் படத்திற்கு ஆறு மாதங்களாக பிரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று, 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்றது என்றும் கூறியுள்ளனர். மேலும் 12 லொகேஷன்களில் நான்கு கட்ட படப்பிடிப்புகளாக சுமார் 820 மணி நேரம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றும் 160 தொழில்நுட்ப குழுவினருடன் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.