பாரதி கலங்கியதை என்னால் தாங்க முடியவில்லை : இளையராஜா

12 செப், 2022 – 10:42 IST

எழுத்தின் அளவு:


Ilaiyaraaja-about-mahakavi-bharathiyar

மகாகவி பாரதியார் நினைவு நாள் நேற்று (செப்.11). இதையொட்டி , இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. நாட்டை பற்றி அவன் எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறான் என நினைத்தால் வியக்க வைக்கிறது. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அப்போதே கற்பனை செய்திருக்கிறான். அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலி செலுத்துவது நமக்கு புண்ணியம் சேர்க்கும்.

இவ்வாறு இளையராஜா அதில் பேசியுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published.