படிப்பை முடித்தை கையோடு சீரியலிலிருந்து விலகிய காவ்யா

20 செப், 2022 – 12:38 IST

எழுத்தின் அளவு:


Kavya-arivumani-quits-from-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். முன்னதாக வீஜே சித்ரா நடித்து வந்த அந்த கதாபாத்திரத்தில், சித்ராவின் மறைவுக்கு பின் காவ்யா நடிக்க ஆரம்பித்தார். முதலில் பலரும் காவ்யாவால் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவை போல நடிக்க முடியாது என்றே நினைத்தனர். ஆனால், அவர் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார்.

இந்நிலையில், பல நாட்களாக முல்லையாக தொடர்ந்து காவ்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் விலகியதற்கான காரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், காவ்யா சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சில படங்களில் கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் அண்மையில் தனது ஆர்கிடெக்ட் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். ஒருவேளை மேற்படிப்பிற்காக கூட அவர் சீரியலை விட்டு விலகியிருக்கலாம் என ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

காவ்யா சீரியலை விட்டு விலகியுள்ளதால் ‘இந்த முல்லையும் போய்ட்டாளா? இனி முல்லையாக நடிக்கப்போவது யார்?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் நேயர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.