நெருக்கடிகளை சமாளிக்க உலக ஒற்றுமை முக்கியம்: ஐ.நா சபையில் பிரிங்கா சோப்ரா உரை

21 செப், 2022 – 13:29 IST

எழுத்தின் அளவு:


Priyanka-Chopra-speech-at-UN

பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடித்து வருகிறவர் பிரியங்கா சோப்ரா. ஜக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். இந்த நிலையில் ஐ.நா சபையில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா சோப்ரா உரையாற்றினார் அது வருமாறு:

உலகளாவிய ஒற்றுமை என்பது தற்போது முன்பைவிட அதிகமாக தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் பல நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. பருவநிலை மாற்றம், வாழ்வாதார பாதிப்பு, மோதல்கள், இயற்கைச் சீற்றம், வறுமை, இடப்பெயர்வு, பசி, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை சமூகத்தின் அடித்தளத்தை அழிக்கின்றன.

இதிலிருந்து மீள்வதற்கு உலகம் நீண்ட காலமாக போராடி வருகிறது. உலகம் முழுவதிலும் தற்போது ஏற்பட்ட நெருக்கடி தற்செயலாக ஏற்படவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து மீள சரியான திட்டத்துடன் செயல்பட வேண்டும். உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க உலகம் இப்போது ஒற்றுமையோடு இருப்பது மிகவும் முக்கியம். என்றார்.

இந்த கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற மலாலாவும் பேசினார். பிறகு பிரியங்காவும், மலாலாவும் தனியாக சந்தித்து பேசினார்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published.