நடிகை அஞ்சலி, ‘ஃபால்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த தொடரில் அவருடன் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார், சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்கிறார்.

திவ்யா என்ற இளம் பெண்ணுக்கு, தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. யாரையும் நம்ப முடியாத சூழலில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள், உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுவது போல் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘வெர்டிஜ்’ எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது.

Source link

Leave a Reply

Your email address will not be published.