பிரபல வில்லன் நடிகர் சண்முகராஜாவின் தம்பி, முனிஸ் ராஜா. ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் பிரபலமான இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண், தனக்கு நயினார் முஹம்மது என்ற மகனைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது என்றும் ஒரு வளர்ப்பு மகள் இருந்தார், அவரை சீரியல் நடிகர் வசப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் முனிஸ்ராஜா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.