நடிகர் திலீப் வழக்கில் நடிகையின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்

23 செப், 2022 – 10:55 IST

எழுத்தின் அளவு:


Kerala-HC-dismisses-victim's-plea-to-change-trial-court-in-2017-actress-assault-case-involving-Dileep

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 10 நபர்களில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமின் பெற்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட நடிகை, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் தனது வழக்கின் விசாரணை பாரபட்சமாக இருப்பதாகவும் அங்கிருந்து முறையான நீதி கிடைக்காது என கருதுவதால் அதை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை வைத்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி திலீப் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அதனால் இந்த விசாரணை நியாயமானதாக இல்லை என்றும் அதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நடிகை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த காரணத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம் இந்த தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வழக்கு விசாரணையை ஒரு பெண் நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நடிகை வைத்த கோரிக்கையின்படி தான் தற்போது பெண் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

ரூ.57 கோடிக்கு விலைபோன காட்பாதர் ஓடிடி உரிமைரூ.57 கோடிக்கு விலைபோன காட்பாதர் … பொன்னியின் செல்வன் விக்ரம் நானேதான் ; பிரசன்னா பொன்னியின் செல்வன் விக்ரம் நானேதான் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinemaSource link

Leave a Reply

Your email address will not be published.