நடிகர்களின் உதவியாளர்களுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்: எஸ்.ஆர்.பிரபாகரன் அதிர்ச்சி தகவல்

09 செப், 2022 – 11:24 IST

எழுத்தின் அளவு:


Rs-25-lakh-salary-for-actors'-assistants:-SR-Prabhakaran-shocking-news

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன், தெலுங்கு சினிமாவில் நடிகர்களின் உதவியாளர்களுக்கு அந்தந்த நடிகர்களே சம்பளம் தரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபாகரன் கூறியிருப்பதாவது: தற்போது முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்து வருகிறேன். இது எனக்கு சசிகுமாருடன் மூன்றாவது படம். இப்படத்தில் பாக்யராஜ் சார் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். அதற்கடுத்து தான்யா ரவிச்சந்திரனை வைத்து “ரெக்கை முளைத்தேன்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். அது ஒரு இளைஞர்களுக்கான கிரைம் த்ரில்லர் படமாக இருக்கும். மேலும், ரூரல் பொலிட்டிகல் கிரைம் கதையாக “கொலைகார கைரேகைகள்”என்ற இணையத் தொடரை ஜீ5 நிறுவனத்திற்காக இயக்கி வருகிறேன். இதில் கலையரசன், வாணி போஜன் நடித்து வருகின்றனர்.

ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதற்கு வியாபாரம் தான் காரணம். ஆனால், ஓடிடி மற்றும் திரையரங்கு இரண்டு பார்வையாளர்களும் ஒரே மாதிரி உள்ளார்கள். டெக்னாலஜி ரசிகர்களின் கையில் வந்து விட்டது, ஓடிடியில் தான் பெரும்பாலான மக்கள் தற்போது படங்களை பார்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்கு என்றிருக்கிறது. இரண்டையும் ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன். தெலுங்கு சினிமாத் துறையில் நடிகர் நடிகைகளின் அசிஸ்டண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களே சம்பளம் தர வேண்டும் என்ற தீர்மானம் சரியானதும் வரவேற்கத்தக்கதும் கூட. தமிழ் சினிமாவில் இதைப் பற்றி அனைத்து தயாரிப்பாளர்களின் மனதில் எண்ணம் இருந்தாலும், இந்த பேச்சை முதலில் யார் எடுப்பது என்ற தயக்கம் தான்.

ஏனென்றால், நடிகர்களுக்கே அவர்களின் அசிஸ்டண்டுகளை பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். நாள் ஒன்றிற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு படத்திற்கு 25 லட்சம் வரை அவர்களுக்கு மட்டுமே சம்பளத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இது பல நடிகர்களுக்கு தெரியாது. இது பற்றி நடிகர்களிடம் நம்மால் கேட்கவும் முடியாது. மேலும், நடிகர்களுக்கு சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியாக இருக்கிறது. இதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Source link

Leave a Reply

Your email address will not be published.