> ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ம் ஆண்டு வெளியான ‘அவதார்’, வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்தப் படம் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. இந்தியாவில், முன்பதிவில் ரூ.1 கோடி வசூலித்துள்ள இந்தப்படம் இந்த வார இறுதியில் மட்டும் ரூ.5 கோடி வசூலிக்கும் என்கிறார்கள்.

> துல்கர் சல்மான் நடித்த ‘குருப்பு’ படத்தை வெளியிட தடைகோரி எர்ணாகுளத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் வழக்குத் தொடர்ந்தார். இது இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாகிவிட்டதால் தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

> நடிகை கீர்த்தி ஷெட்டி, ‘நிஷ்னா’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்காக இதைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தனது நீண்டநாள் கனவு எனக் கூறியுள்ளார்.

> அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத் மிகா நாயகிகளாக நடித்துள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.