தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முழுவிபரம்

12 செப், 2022 – 13:34 IST

எழுத்தின் அளவு:


South-Indian-writers-union-election-result-full-list

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான மற்றொரு அணியினரும் களமிறங்கினர். இதில் வெற்றி பெற்றவர்கள் முழு விபரம் இதோ….

தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். செயலாளராக பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத்தலைவர்களாக எஸ்ஏசியின் ரவி மரியாவும், பாக்யராஜ் அணியின் யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்ஏசியின் சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்ஏசி அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியின் பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.