தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் வெற்றி

11 செப், 2022 – 14:55 IST

எழுத்தின் அளவு:


South-Indian-Film-Writers'-Association-Election

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த முறையும் தற்போது தலைவராக உள்ள இயக்குனர் கே.பாக்யராஜ் மீண்டும் தலைவராக போட்டியிட்டார். எதிரணியில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிட்டார். இந்த தேர்தல் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிட்டார். துணைத் தலைவராக ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர் செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில், தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டார். துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோரும் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 350 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் உட்பட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. பின்னர் எண்ணப்பட்ட ஓட்டுகளில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கே.பாக்யராஜ் 192 ஓட்டுகளும், எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகளும் பெற்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.