திரைப்படமாகிறது ஜானி டெப்பின் விவாகரத்து வழக்கு

19 செப், 2022 – 12:05 IST

எழுத்தின் அளவு:


Johnny-depp---amber-court-case-made-as-movie

‛பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தின் உலக புகழ் பெற்றவர் ஜானி டெப். ஜாக் ஸ்பேரோ என்ற அவரது கேரக்டருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள், காமெடி கலந்த ஆக்ஷன் கேரக்டராக உருவாக்கப்பட்டிருந்தது.

ஜானி டெப் 2015ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். அதன்பிறகு பத்திரிகை ஒன்றில் ஜானி டெப் பற்றி ஆம்பர் எழுதியது சர்ச்சையை உண்டாக்கியது. ஜானி டெப் தன்னை குடித்து விட்டு துன்புறுத்தியதாகவும், செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் ஜானி டெப்பின் இமேஜ் பறிபோனது, அவர் நடிக்க இருந்த படங்களும் கைநழுவி போனது.

இதனால் ஆம்பர் எழுதிய கட்டுரை தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஜானிடெப்புக்கு இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க ஆம்பருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று ஆம்பர் கதறி அழ, அந்த பணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார் ஜானி டெப்.

இந்த நிலையில் இவர்களின் வழக்கு ‘ஹாட் டாக் : தீ டீப் ஹார்ட் டிரையல்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. இது டாக்குமென்டரி கலந்த ஒரு திரைப்படமாகும். அதாவது நிஜகாட்சிகளும், கற்பனை காட்சிகளும், நிஜமான பேட்டிகளும் இணைந்து இந்த படம் இருக்கும்.

படத்தில் ஜானி டெப் கேரக்டரில் மார்க் ஹாப்கா நடித்திருக்கிறார். மேகன் டேவிஸ் ஆம்பர் ஹெர்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமெரிக்காவின் முன்னணி டிவி நடிகர்கள் இரு தரப்பின் வழக்கறிஞர்களாக நடித்திருக்கின்றனர். படம் செப்டம்பர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.