திரைத்துறையினர் கஷ்டங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ரகுல் ப்ரீத் சிங்

11 செப், 2022 – 15:10 IST

எழுத்தின் அளவு:


Fans-should-know-the-hardships-of-the-film-industry-says-Rakul-Preet-Singh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும், சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‛திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளிவருவதைத்தான் விரும்புகிறேன். திகில் படங்கள் என்றால் விருப்பம். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். லைட்மேன், கேமராமேன், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என உருக்கமாக கூறியுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.