'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் கவனம் ஈரத்த சர்வானந்த் நாயகனாக நடிக்கும் 'கணம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்தி இயக்கத்தில் சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கணம்'. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமலா நடிக்கும் இப்படத்தில் சதீஸ், ரமேஷ் திலக், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கில் 'ஒகே ஒக்க ஜீவிதம்' என்ற பெயரில் படம் வெளியாகிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – டைம் ட்ராவல் பாணியில் கடந்த காலத்துக்குச் சென்று தன் தாயை காண விரும்புகிறார் நாயகன். விஞ்ஞானியாக வரும் நாசர் நாயகனுக்கு உதவுகிறார். காலம் கடக்கும் நாயகனின் ஆசை நிறைவேறியதா? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 3 நண்பர்களை சுற்றியே கதை நிகழ்கிறது. கணிதம், விதி, கடந்த காலம், எதிர்காலம் என ஃபான்டஸி ஜானரில் ஏற்கெனவே படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 'கணம்' படத்தில் ட்ரெய்லரும் அதையே பிரதிபலிப்பதாக தெரிகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published.