ரஜினி – அரவிந்த்சாமி கூட்டணி ‘தளபதி’ படத்திற்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்திய இயக்கியிருந்த திரைப்படம் ‘டான்’. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரூ.100 கோடி வசூலை எட்டிய படம், ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் இந்தப் படத்தை முடித்துவிட்டு சிபி சக்ரவரத்தியுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் ரஜினி – சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் அரவிந்த்சாமி அளித்தப் பேட்டி ஒன்றில் மறைமுகமாக பதிலை தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்தின் கடைசி கட்ட ஸ்கிரிப்ட் வேலைகளில் சிபி சக்ரவர்த்தி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியும் அரவிந்த்சாமியும் கடைசியாக 1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது கவனிக்கத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published.