ஜான்வி கபூர், நேற்றும், இன்றும்….

22 செப், 2022 – 12:19 IST

எழுத்தின் அளவு:


Janhvi-Kapoor-yesterday-and-Today

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை ஸ்ரீதேவி. அவரது வாரிசுகளில் மூத்த மகளான ஜான்வி கபூர் மட்டுமே நடிக்க வந்துள்ளார். சில ஹிந்திப் படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார் ஜான்வி. ஆனால், இன்னமும் முன்னணி நடிகையாக பெரிய அளவில் தடம் பதிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

தென்னிந்தியப் படங்களில் நடிக்க அவருக்குப் பலர் அழைப்புகள் விடுத்தாலும் அதை கண்டு கொள்வதில்லை. அவருடைய அப்பா போனி கபூர் தமிழ் சினிமாவில் அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அவர்களது அடுத்த படமான ‘துணிவு’ படத்தின் முதல் பார்வை நேற்றுதான் வெளியானது.

நேற்று முன் தினம் அழகழகான பூ போட்ட சேலையில் ’16 வயதினிலே’ ஸ்ரீதேவி தான் திரும்ப வந்து விட்டாரோ என்று சொல்லுமளவிற்கு சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். ‘செந்தூரப் பூவா, செவ்வந்திப் பூவா’ என்று வியக்கும் அளவிற்கு சேலையில் அவ்வளவு அழகாய இருந்தார் ஜான்வி. அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு ஒரு நாட்களுக்குள் ஒரு அதிரடியான போட்டோ ஷுட் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

ஆரஞ்சு நிற கவுனில் தூக்கலான கிளாமருடன் ஜான்வி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பதிவிட்ட சில மணி நேரங்களுக்குள் 12 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. சேலை அணிந்து ஜான்வி பதிவிட்ட புகைப்படங்கள் ஒரு நாளைக் கடந்த பின்னும் 10 லட்சம் லைக்குகளைக் கூடத் தாண்டவில்லை. ம்ம்ம்ம்…நமது ரசிகர்களின் ரசனையை என்னவென்று சொல்வது…?????.Source link

Leave a Reply

Your email address will not be published.