சொத்து விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கும் விஷால்

10 செப், 2022 – 10:52 IST

எழுத்தின் அளவு:


Vishal-asks-for-time-to-file-property-details

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
இது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 15 கோடி செலுத்தப்படவில்லை. லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் தங்களுக்கு 18 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்குவட்டி கட்டி வருவதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விஷால் தனது சொத்து விபரங்களை செப்படம்பர் 9ந் தேதிக்குள் (நேற்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஷாலின் சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கோர்ட் உத்தரவுப்படி விஷாலும் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேலும் 2 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.Source link

Leave a Reply

Your email address will not be published.