சென்னை மக்களை இழிவுப்படுத்திய ராஜூ பகிரங்க மன்னிப்பு

13 செப், 2022 – 13:52 IST

எழுத்தின் அளவு:


Raju-says-apology

பிக்பாஸ் வெற்றியாளரான ராஜூ பாய் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரன்பீர் கபூர், ராஜமவுலி, நாகர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோயும்புத்தூர் வட்டார மொழிகளை பேச கற்றுக் கொடுத்தார்.

அப்போது அவர் சென்னை வட்டார வழக்கு பற்றி பேசும் போது சென்னை மக்களை இழிவுப்படுத்தும் தோரணையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து ராஜூவை சோஷியல் மீடியாவில் பலரும் திட்ட ஆரம்பித்தனர். பிரச்னையை புரிந்து கொண்ட ராஜூ ‘நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். இரிடேட் ஆக வேண்டாம். மன்னிக்கவும்’ என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, அந்த காணொளியில் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டடாக இருப்பார்கள் என்று சொல்லியதற்கு தான் பலரும் அவரை விமர்சித்தனர். இப்போது மீண்டும் இரிடேட் ஆக வேண்டாம் என ராஜூ சொல்லியிருப்பது விமர்சப்பிவர்களை கிண்டலடிக்கும் தொனியில் இருப்பதாக ராஜூவை மேலும் விமர்சித்து வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.