சிறந்த புராணப்படம்: மாயோனுக்கு டொராண்டோ திரைப்பட விழாவில் விருது

17 செப், 2022 – 11:49 IST

எழுத்தின் அளவு:


Maayon-movie-got-award

கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 47வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட ‘மாயோன்’ திரையிடப்பட்டது. பின்னர் சிறந்த புராண படத்துக்கான விருது வழங்கப்பட்டது. டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரான இந்த படத்தில் சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்திருந்தார்கள்.

இதுகுறித்து படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்த அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது: மாயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி அடைய செய்தது. தற்போது மாயோன் திரைப்படத்திற்கு ‘சிறந்த சர்வதேச திரைப்பட விருதினைப் பெற்றிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தற்போது ‘மாயோன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த சர்வதேச விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது. டொரன்டோ சர்வதேச திரைப்படவிழாவைத் தொடர்ந்து, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றார்.

Advertisement

தியேட்டருக்கு வருகிறாள் குழலிதியேட்டருக்கு வருகிறாள் குழலி

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.