சினிமாவில் இயக்குனர்களும், ரசிகர்களும் மாறிவிட்டார்கள் : அமலா

03 செப், 2022 – 15:10 IST

எழுத்தின் அளவு:


Fans,-directors-are-changed-in-cinema-says-Amala

80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. அன்றைக்கு இருந்த முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அமலாவின் மகன் அகில் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடிக்காத அமலா கணவர் பெயரில் பள்ளிகள், விலங்கு நலச் சங்கம் போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் ஒக்கே ஒக்க ஜீவிதம், தமிழில் கணம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சர்வானந்தின் தாயாக நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 30 வருடமாக ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். நடிக்க தோன்றவில்லை என்பதுதான் என் பதில். இப்போது ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கணம் படத்தின் கதை என் மனதை என்னை மிகவும் கவர்ந்தது. இது அம்மா சென்டிமெண்ட் படம். நானும் ஒரு குழந்தைக்கு அம்மா என்பதால் படத்தில் வரும் சர்வானந்த் கேரக்டர் என் மகனை நினைவுபடுத்தியதால் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பீர்களா என்பது அடுத்த கேள்வி. கணம் மாதிரி கதை அமைந்து நல்ல தயாரிப்பாளரும் கிடைத்தால் நடிப்பேன். முதலில் கணம் படத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும் சினிமாவை உற்று கவனிக்கிறேன். வீட்டில் சினிமா பற்றி நிறைய பேசுவோம். இப்போது சினிமா மாறிவிட்டது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு ரசிகர்களின் ரசிப்பு தன்மையிலும், இயக்குனர்களின் படைப்புகளிலும் மாற்றம் வந்து விட்டது. இனி கதைதான் ஹீரோ என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

நான் நடித்துக் கொண்டிருக்கும்போது கேபிள் டிவி ஆதிக்கம் இருந்தது. சினிமா அழிந்து விடும் என்றார்கள். இப்போது ஓடிடியின் ஆதிக்கம், இப்போதும் அதே குரல் ஒலிக்கிறது. சினிமா ஒரு காலமும் அழியாது. காலத்திற்கு ஏற்ப அது தன்னை மாற்றிக் கொள்ளும்.

இவ்வாறு அமலா கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.