மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர்விஜயகுமார் தயாரித்துள்ள படம், ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வாணி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். ஷபீர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மதன் கார்க்கி, பிரியன், தமிழணங்கு பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 16-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பார்த்திபன், ஹரி, மகிழ் திருமேனி, அறிவழகன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரசன்னா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் அருண் விஜய் பேசும்போது, ‘‘இந்தப் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். பார்வையாளர்கள் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கு காரணம். எல்லோரும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைப் பார்த்து கோபப் பட்டிருப்போம். அதற்குப் பெரிதாக எதிர்வினையாற்ற முடியாமல் இருந்திருக்கும்.

அதே போல பாரி வெங்கட் என்ற கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பதுதான் படம்.இதற்கு முன்பும் போலீஸ்கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கும். ‘யானை’ படம்ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படமும் பேசக்கூடிய படமாக, பிடித்தமானதாக இருக்கும். இவ்வாறு அருண் விஜய் கூறினார்.Source link

Leave a Reply

Your email address will not be published.