குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம், ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 4-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published.