வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் படம் 'விடுதலை'. பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

இந்தப் படத்துக்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. பீட்டர் ஹெய்ன் இந்தக் காட்சியை அமைத்தார். கடந்த சில நாட்களாக அங்கு நடந்து வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published.