ஒரே நாளில் நாகார்ஜுனா, அமலா படங்கள் ரிலீஸ்

07 செப், 2022 – 10:50 IST

எழுத்தின் அளவு:


Nagarjuna---Amala-movies-releasing-on-same-day

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான ஜோடியாக ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நாகார்ஜுனா, அமலா. ஒன்றாக சேர்ந்து நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். நாகார்ஜுனா இன்னமும் பிஸியான ஹீரோவாக நடித்து வருகிறார். அமலா திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

30 வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் நடித்துள்ள ‘கணம்’ படம் தமிழிலும் தெலுங்கிலும் நாளை மறுநாள் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் ஹிந்தியில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிரம்மாஸ்திரா’ படமும் வெளியாகிறது. இருவருக்குமே அன்றைய தினம் முக்கியமான நாளாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிப்பதால் அமலா அப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரே நாளில் தனது பெற்றோர் நடிக்கும் படம் வெளியாவது குறித்து அவர்களது மகன் அகிலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ‘கணம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் செலிபிரிட்டி ஷோவில் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகியோர் ஒன்றாக படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published.